'கதாநாயகன்', 'நெருப்புடா' ஓப்பனிங் வசூல் விபரம்

  • IndiaGlitz, [Monday,September 11 2017]

அஜித்தின் 'விவேகம்' ஒருபுறம் மூன்றாவது வாரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்னை வசூல் மூன்றாவது வாரத்திலும் ரூ.30,84,405 வசூல் செய்து விநியோகிஸ்தர்களை திருப்தி செய்து வருகிற்து. இந்த நிலையில் இன்னொரு புறம் கடந்த வெள்ளியன்று விஷ்ணுவின் 'கதாநாயகன்' மற்றும் விக்ரம் பிரபுவின் 'நெருப்புடா' ஆகிய படங்கள் வெளியானது

இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படங்களின் சென்னை வசூல் குறித்து தற்போது பார்ப்போம்

கதாநாயகன்' திரைப்படம் சென்னையில் 17 திரையரங்குகளில் 187 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.54,81,059 வசூல் செய்து சராசரி வசூல் படம் என்ற நிலையில் உள்ளது. அதேபோல் விக்ரம்பிரபுவின் 'நெருப்புடா' திரைப்படம் சென்னையில் 17 திரையரங்குகளில் 175 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.43,21,998 வசூல் செய்து சராசரியை விட சற்று குறைவான வசூலை பெற்றுள்ளது

More News

அனிதா தங்கையா? தலித்தா? ரஞ்சித்துக்கு சீமான் கேள்வி

சமீபத்தில் இயக்குனர் சங்கம் நடத்திய அனிதாவின் நிகழ்வேந்தல் நிகழ்ச்சியில் இயக்குனர் அமீருக்கும், இயக்குனர் ரஞ்சித்துக்கும் ஜாதி, தமிழ் குறித்து காரசாரமான விவாதம் நடந்தது அனைவரும் அறிந்ததே.

அனிதா குடும்பத்திற்கு விஜய் கொடுத்த வாக்குறுதி

சமீபத்தில் நிகழ்ந்த மிகத்துயரமான சம்பவமான அனிதாவின் மரணம் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. 1176 மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவிக்கு தான் விரும்பிய மெடிக்கல் படிப்பை படிக்க இடமில்லை

தினகரன் அணி எம்.எல்.ஏவுக்கு ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை ஐகோர்ட் அதிரடி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியின் சார்பில் நாளை சென்னையில் அதிமுக பொதுக்குழு கூடவுள்ளது. இதற்கான அழைப்பிதழ்கள் அனைவருக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி முன்னிலையில் விக்ரம் வீட்டின் விசேஷ நிகழ்ச்சி

நடிகர் சீயான் விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.

அனிதா வீட்டில் தளபதி விஜய்: குடும்பத்தினர்களுக்கு இரங்கல்

சமீபத்தில் நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பு படிக்கும் வாய்ப்பை இழந்த அரியலூர் அனிதா, மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.