'ஜிகர்தண்டா 2' ஹீரோயின் அழகாக இல்லையா? செய்தியாளர் கேள்விக்கு பதிலடி கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்..!

  • IndiaGlitz, [Saturday,November 18 2023]

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்த நிலையில் இந்த படத்தின் நாயகி அழகாக இல்லை என்று கூறிய செய்தியாளருக்கு கொடுத்த பதிலடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் ’ஜிகர்தண்டா 2. இந்த படம் தீபாவளி விருந்தாக சமீபத்தில் வெளியான நிலையில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்பதும் வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்த நிலையில் அதில் ஒரு செய்தியாளர் ’ஜிகர்தண்டா 2’ படத்தின் நாயகி நிமிஷா சஜயன் அழகாக இல்லை என்றாலும் மாஸ்டருக்கு இணையாக நடித்துள்ளார், அவரை எப்படி தேர்வு செய்தீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு கார்த்திக் சுப்புராஜ் ’அவர் அழகாக இல்லை என்று நீங்கள் எப்படி சொல்லலாம்? எதை வைத்து நீங்கள் அழகை தீர்மானிக்கிறீர்கள்? அழகு என்றால் இப்படித்தான் இருக்கும் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள் போல, அதை வைத்து சொல்கிறீர்கள்’ என்று பதிலடி கொடுத்தார். இதனை அடுத்து சக செய்தியாளர்கள் கார்த்திக் சுப்புராஜின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் கைதட்டினர். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

நயன்தாராவின் பிறந்த நாளில் விக்னேஷ் சிவன் வெளியிட்ட க்யூட் வீடியோ..!

 லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பைக் ஓட்டி பழகுவது தவறா? தனுஷ் மகன் விவகாரம் குறித்து நெட்டிசன்கள் கேள்வி..!

நடிகர் தனுஷின் மகன் தனது வீடு அருகே பைக் ஓட்ட பழகிய போது அது குறித்த வீடியோ வைரலானதை அடுத்து காவல்துறை அவருக்கு ரூ.1000 அபராதம் விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

100 கோடி பட்ஜெட், ஒரு வருடம் ஆராய்ச்சி.. சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகத்தின் முக்கிய தகவல்..!

கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடி என்றும் இந்த படத்தின்

எதிர்பாராத ட்விஸ்ட்.. இந்த வாரம் எலிமினேஷன் இந்த போட்டியாளரா?

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேசன் செய்யப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின்

கமல்ஹாசனின் 'ஆளவந்தான்' ரிலீஸ் தேதி இதுதான்.. நாளை ஒரு எதிர்பாராத சர்ப்ரைஸ்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'ஆளவந்தான்' திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான நிலையில் மீண்டும் இந்த படம் டிஜிட்டலில் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக