close
Choose your channels

விக்ரம் வேதா இயக்குனருடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

Thursday, January 16, 2020 • தமிழ் Comments

விஜய் சேதுபதி, மாதவன், ஷராதா ஸ்ரீநாத் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி திரைப்படம் விக்ரம் வேதா. இந்த படத்தை கணவன் மனைவி இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி இயக்கியிருந்தனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து இந்தி உள்பட ஒரு சில மொழிகளில் இந்த படம் ரீமேக் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி அடுத்ததாக வெப் தொடர் ஒன்றை இயக்க திட்டமிட்டு உள்ளனர். இந்த தொடர்பான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே சத்யராஜ், பிரசன்னா, பாபிசிம்ஹா, நித்யாமேனன், பிரியாமணி, மீனா, தமன்னா இந்தி நடிகர்கள் அக்‌ஷய்குமார், அர்ஜுன் ராம்பால், ஜாக்கி ஷாரப். அபிஷேக் பச்சன், நவாஜூதின் சித்திக், விவேக் ஓபராய், நடிகைகள் கியூமா குரோஷி, கியாரா அத்வானி உள்பட பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் வெப் தொடர்களில் நடித்து வரும் நிலையில் தற்போது இந்தப் பட்டியலில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர்களும் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz