close
Choose your channels

பொங்கலுக்கு வெளியாகும் 'பரியேறும் பெருமாள்' கதிர் படம்

Wednesday, January 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் நடித்த நடிகர் கதிர் நடித்த படங்களில் ஒன்று 'சிகை'. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி ஒருசில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை.

இந்த நிலையில் இந்த படம் நேரடியாக ஜீடிவியின் மொபைல் செயலியில் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமேசான் பிரைம் போன்ற செயலிகளில் ஒருசில திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது கதிரின் 'சிகை' படமும் செயலியில் வெளியாகவுள்ளது.

பெண் வேடத்தில் கதிர் நடித்திருக்கும் இந்த படத்தில் மீரா நாயர், பிக்பாஸ் வின்னர் ரித்விகா, மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜெகதீஷ் பாபு இயக்கத்தில் ரான் எதான் யோஹன் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படம் ரிலீஸ் குறித்து நடிகர் கதிர் தனது சமூக வலைத்தளத்தில் 'நாங்களும் பொங்கலுக்கு வர்றோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.