close
Choose your channels

கதிர், சூரி படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

Monday, June 17, 2019 • தமிழ் Comments

'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் மக்களின் மனதை கவர்ந்த நடிகர் கதிர் தற்போது விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நாயகனாக நடித்து வரும் படம் ஒன்றை பிரபாகரன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன்  கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு 'சர்பத்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதிருடன் முக்கிய வேடத்தில் சூரி நடித்து வருகிறார். இன்று வெளியாகியுள இரண்டு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரிலும் சூரி இருப்பதால் அவர் நாயகனுக்கு இணையான கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிகிறது. 

அஜிஷ் இசையில் பிரபாகரன் ஒளிப்பதிவில் பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை 7ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தான் விக்ரம் நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கி வரும் படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz