close
Choose your channels

கால்பந்து விளையாட்டு வீரரின் படத்தில் விஜய்சேதுபதி

Thursday, July 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து முடிந்து அதில் பிரான்ஸ் நாடு கோப்பையையும் வென்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் கால்பந்து விளையாட்டு வீரர் குறித்த படம் ஒன்று கோலிவுட்டில் உருவாகவுள்ளது.

இந்த படத்தில் நடிகர் கதிர் கால்பந்து வீரராக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 'மதயானைகூட்டம்' படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் 'கிருமி' படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை பெற்ற நடிகர் கதிர், விஜய்சேதுபதி-மாதவன் நடித்த 'விக்ரம் வேதா' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

இந்த நிலையில் தற்போது கால்பந்து வீரர் கேரக்டர் ஏற்று நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் 'விக்ரம் வேதா' படத்தில் பணிபுரிந்த பலர் பணிபுரியவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் நடிகர் கதிர் வித்தியாசமான இரண்டு கெட்டப்புகளில் நடித்து முடித்துள்ள 'சிகை' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.