மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் கத்துக்குட்டி

  • IndiaGlitz, [Saturday,March 17 2018]

நிலா சாட்சி கிரியேஷன்ஸ் அன்வர் கபீர், ஓன் புரொடக்சன்ஸ் ராம்குமார், முருகன் தயாரிப்பில் உருவான திரைப்படம் 'கத்துக்குட்டி'. இந்த படம் சமீபத்தில் ரீலிஸாகி பலரின் பாராட்டையும் ஆதரவையும் பெற்றது. இந்த நிலையில் கத்துக்குட்டி திரைப்படம் மீண்டும் பட்டையை கிளப்ப மார்ச் 23ம் தேதி ரிலிசாகவுள்ளது.

படத்தின் மொத்த காட்சிகளையும் தஞ்சாவூர் மாவட்டத்திலேயே படமாக்கி, தஞ்சை மக்களின் வாழ்வியலை அப்படியே கண்முன்னே நிறுத்தி இருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன். கத்துக்குட்டி படத்தை பார்த்த பல பிரபலங்கள் மனமுவந்து பாராட்டியுள்ளனர்.

'தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் கத்துக்குட்டி' என வைகோ, பாரதிராஜா கூறியுள்ளனர். ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம் 'கத்துக்குட்டி' என சீமான் மனம் திறந்த பாராட்டியுள்ளார். எண்ணற்ற பரிசுகளும் மரியாதைகளும் கத்துக்குட்டி படத்திற்க்கும் படத்தின் குழுவினருக்கும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் நாயகன் நரேன், முதன் முறையாக வயிறு குலுங்க வைக்கும் அளவுக்கு காமெடியில் ரவுண்ட் கட்டியிருக்கிறார். அவருக்குத் துணையாக வரும் சூரி, 'ஜிஞ்சர்' என்கிற பாத்திரத்தில், படம் முழுக்க காமெடி அதகளத்தையே நடத்தி இருக்கிறார்.

நரேன், சூரி, ஸ்ருஷ்டி டாங்கே, ஜெயராஜ், ஞானவேல், காதல் சந்தியா, காதல் சரவணன், ராஜா, சித்தன் மோகன், துளசி, மாறன், தேவிப்பிரியா, அற்புதன் விஜய், கசாலி மற்றும் பலர் நடித்த இந்த படத்திற்கு அருள்தேவ் இசையமைத்துள்ளார். சந்தோஷ் ஸ்ரீராம் ஒளிப்பதிவில், ராஜாசேதுபதி படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை இரா.சரவணன் இயக்கியுள்ளார்.

 

More News

ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு இன்ஸ்பெக்டர் கொடுத்த வித்தியாசமான ட்ரீட்

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வலம் வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி, இனிமேல் ஹெல்மெட் போட்டு தான் வண்டி ஓட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கி அசத்தியுள்ளார்

மும்பையில் பிரபல தமிழ் நடிகையின் ரகசிய திருமணம்

ரஜினியுடன் சிவாஜி, தனுஷுடன் 'திருவிளையாடல் ஆரம்பம், விக்ரமுடன் 'கந்தசாமி' உள்பட பல வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா.

என்னையும் ரஜினியையும் அரசியல் நிச்சயம் பிரிக்கும்: கமல்

திரையுலகில் நண்பர்களாக இருந்த கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் அரசியல் களத்தில் ஒரே நேரத்தில் இறங்கியிருந்தாலும் இருவரும் வெவ்வெறு பாதைகளில் பயணம் செய்கின்றனர்.

நிர்பயாவின் தாய் குறித்து முன்னாள் டிஜிபி சர்ச்சை கருத்து

'ஆஷா தேவிக்கு நல்ல உடலமைப்பு உள்ளது. அவரின் மகள் எந்த அளவிற்கு அழகாக இருந்திருப்பார் என்று எண்ணி பாருங்கள்' என்று பேசியபோதே மேடையில் சலசலப்பு ஏற்பட்டது.

'வேலைக்காரன்' சிவகார்த்திகேயனுடன் இணையும் 'பாஸ்' இயக்குனர்

நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் 'வேலைக்காரன்' என்ற வெற்றி படத்தில் நடித்த நிலையில் தற்போது பொன்ராம் இயக்கி வரும் 'சீமராஜா' படத்தில் நடித்து கொண்டிருக்கின்றார்.