வெளியில போயிறலாம், ஆனால் உயிரோட போவோமான்னுதான் தெரியல: 'லிப்ட்' டிரைலர்

  • IndiaGlitz, [Friday,September 24 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற கவின் நடித்த ‘லிப்ட்’ திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிட்யில் வெளியாக உள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐடி அலுவலகம் ஒன்றில் வேலை பார்க்கும் கவின், ஒரு பணி நிமித்தம் காரணமாக இரவு முழுவதும் அலுவலகத்தில் தங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்போது ஏற்படும் திகில் அனுபவங்கள், கவின் மற்றும் அம்ரிதா லிப்டில் செல்லும் போது மாட்டிக் கொள்வது போன்ற திகில் காட்சிகள் இந்த படத்தின் டிரைலரில் அமைந்துள்ளன.

படத்தின் பெரும்பாலான காட்சிகளில் கவின் மற்றும் அமிர்தா ஐயர் ஆகியோர் மட்டுமே இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக திகில் காட்சிகள் பார்வையாளர்களை சீட் நுனிக்கு வர வைக்கும் வகையில் படம் அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 1ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் வினித் வரப்பிரசாத் என்பவர் இயக்கியுள்ளார். பிரிட்டோ மைக்கேல் இசையில், யுவா ஒளிப்பதிவில் மதன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் கவினுக்கு திருப்புமுனையை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

More News

20 வருடங்களுக்கு பின் அமலா ரீஎண்ட்ரி ஆகும் தமிழ்ப்படம்!

தமிழ் திரையுலகில் கடந்த 80களில் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலா என்பது தெரிந்ததே.  டி ராஜேந்தர் இயக்கிய 'மைதிலி என்னை காதலி' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி

நம்ம தலையெழுத்த நம்ம தாண்ட எழுதணும்: 'கொம்பு வச்ச சிங்கம்டா' டிரைலர்

சசிகுமார் நடிப்பில் எஸ்ஆர் பிரபாகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு வச்ச சிங்கம்டா' என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது.

என்னுடைய ராஜா இவர்தான்: மகனின் பெயரை அறிவித்த பிக்பாஸ் சாண்டி!

பிரபல நடன இயக்குனரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சாண்டி மாஸ்டருக்கு ஏற்கனவே லாலா என்ற பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது

யார் இந்த சாத்தான் ரைடர்ஸ்: 'வலிமை' வினோத் எடுத்த வித்தியாசமான கதை!

இயக்குனர் எச் வினோத் படம் என்றாலே வித்தியாசமாக இருக்கும் என்றும் 'சதுரங்க வேட்டை' மற்றும் 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய இரண்டு படங்களே இதற்கான சாட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.

15 வருட உழைப்புக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்… வைரம் கிடைத்த குஷியில் நெகிழ்ந்த ஊழியர்!

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் பல ஆண்டுகளாக வைரம் தோண்டும் சுரங்களில் வேலைப்பார்த்து வருகிறார்.