'பிகில்' நடிகையுடன் கவின் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

  • IndiaGlitz, [Friday,March 13 2020]

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் கவின். இவர் தனது சக போட்டியாளர்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக போட்டியில் இருந்து விலகி தியாகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவருக்கு அதிக அளவிலான ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தற்போது முதல் முறையாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி கவின் நடித்து வந்தார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன

முதல்கட்டமாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. வரப்பிரசாத் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ’லிஃப்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கவின் ஜோடியாக விஜய்யின் பிகில் படத்தில் நடித்த அம்ரிதா அய்யர் நடித்து வருகிறார். இவர் பிகில் படத்தில் கால்பந்து அணியின் கேப்டனாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது

இன்று வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் ரத்தத்தின் நடுவில் கவின் மற்றும் அம்ரிதா அய்யர் லிப்டில் உட்கார்ந்திருப்பதை பார்க்கும்போதே இது ஒரு சஸ்பென்ஸ் அடங்கிய த்ரில் படம் என்பது தெரிய வருகிறது

More News

இது பெரியார் மண் அல்ல, பெருந்தன்மை உள்ளவர்களின் மண்: அஜித், விஜய் பட இயக்குனர் 

அஜித் நடித்த 'திருப்பதி', விஜய் நடித்த 'சிவகாசி', திருப்பாச்சி' போன்ற பல இடங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு. விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் இவரது பெயரும்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கைது! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இதனால் சாலையில் நடந்து செல்லும் அப்பாவிகள் கூட பாதிக்கப்படுவதாகவும்,

உஷார் மக்களே..! ஆக்சிஸ் வங்கியிலிருந்த அரசு கணக்கை மூடியுள்ளது மஹாராஷ்டிரா அரசு.

இந்நிலையில் மஹாராஷ்டிராவில் உள்ள சிவசேனா அரசானது தனது அரசு கணக்கினை ஆக்சிஸ் வங்கியிலிருந்து எஸ்.பி.ஐ வங்கிக்கு மாற்றியுள்ளது.

மக்கள் மனதை ரஜினி புரிந்து கொள்ள வேண்டும்: ரஜினிக்கு அட்வைஸ் செய்த நக்மா!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அரசியல் அட்வைஸ் செய்யாதவர்கள் இந்தியாவில் யாருமே இல்லை என்ற வகையில் ஒரு மீம்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைரலாகி வந்தது தெரிந்ததே.

ஜுவான்டஸ் டிபாலாக்கு கொரோனா பாதிப்பா..?!

டிபாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல்கள் குறித்து ஜுவான்டஸ் அணியாது எவ்வித விளக்கமும் கொடுக்கவில்லை.