நெல்சனுடன் நேருக்கு நேர் மோதிய கவின்: வைரல் வீடியோ

நெல்சன் மற்றும் கவின் ஆகிய இருவரும் நேருக்கு நேராக மோதும் இண்டோர் கேம் விளையாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் நெல்சன் பணிபுரிந்து கொண்டிருந்தபோது கவினுடன் நல்ல பழக்கம் என்பதும், இருவரும் கடந்த பல ஆண்டுகளாக நட்புடன் உள்ளார்கள் என்பதும் தெரிந்ததே. மேலும் நெல்சன் இயக்கிய ’டாக்டர்’ மற்றும் ’பீஸ்ட்’ படங்களில் உதவி இயக்குனராக கவின் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நெல்சன் மற்றும் கவின் ஆகிய இருவரும் சமீபத்தில் கொடைக்கானல் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது இருவரும் இன்டோர் விளையாட்டான டேபிள் சாக்கர் என்ற விளையாட்டை விளையாடும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஒருவரை ஒருவர் வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்துடன் விளையாடிய இந்த வீடியோவை ரசிகர்கள் ரசித்து இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 169’ என்ற படத்தை இயக்க உள்ளார் என்பதும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகர் கவின் தற்போது ‘ஊர்க்குருவி’ மற்றும் ’டாடா’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

More News

மனைவியுடன் திடீரென முதலமைச்சரை சந்தித்த 'ராக்கிபாய்' யாஷ்!

கேஜிஎஃப் படத்தில் நடித்த 'ராக்கிபாய்'  யாஷ், தனது மனைவியுடன் முதலமைச்சரை சந்தித்து உள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

கமல்ஹாசனின் 'விக்ரம்': டிஜிட்டல், சாட்டிலைட் உரிமையின் அதிகாரபூர்வ அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக

தளபதி விஜய் பாணியில் களமிறங்கிய ஷாருக்கான்: வைரல் புகைப்படம்

தளபதி விஜய் பாணியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் எடுத்த செல்பி புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது .

வர வர ரொம்ப ஓவரா போறிங்க: பிக்பாஸ் மதுமிதாவின் கிளாமர் வீடியோவுக்கு நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ்!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா கடந்த சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு கலக்கி வருகிறார்

டிரைலரில் இருந்த காட்சிகள் படத்தில் இருக்காது: வருத்தத்துடன் கூறிய 'சாணிக்காகிதம்' இயக்குனர்!

செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'சாணிக்காகிதம்' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தை நாளை மறுநாள் திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.