close
Choose your channels

தர்ஷனிடம் பாடலை கடன் வாங்கிய கவின்!

Saturday, February 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் புகழ் பெற்றிருந்தாலும் நடிகர் கவின், ’பிக்பாஸ் 3’ நிகழ்ச்சி மூலம் பெரும் புகழ் பெற்றார். இந்த போட்டியின்போது சக போட்டியாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக போட்டியிலிருந்து விலகிய அவருடைய மனப்பான்மையை அனைவரும் பாராட்டினர்

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருந்து வரும் கவின் தற்போது தனது சமூக வலைப்பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வயல் வரப்பில் ஒத்தையடிப் பாதையில் அவர் நடந்து வருவதுபோல் இருக்கும் இந்த புகைப்படத்தில் அவர் தர்ஷனின் பாடலை பதிவு செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தர்ஷன் நடித்த ‘கனா’ என்றா திரைப்படத்தில் இடம்பெற்ற ’ஒத்தையடி பாதையிலே தாவி ஓடுற’ என்ற பாடலை பதிவு செய்து இந்த புகைப்படத்திற்காக தர்ஷனின் பாடலை கடன் வாங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.