close
Choose your channels

'கவின்' நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் யார்?

Saturday, December 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் கவின் நடித்த ’லிப்ட்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கவின் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. ஜீவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜிப்ஸி என்ற திரைப்படத்தை தயாரித்த கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்தின் அம்பேத்குமார் என்பவர் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் தான் கவின் நடிக்க உள்ளார் என்றும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் கவின் ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் காமெடி மற்றும் ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரம் தொடங்கும் என்றும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.