close
Choose your channels

இராவண கோட்டம் படத்தின் நாயகி அறிவிப்பு!

Monday, May 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்கவுள்ள 'இராவண கோட்டம்' என்ற திரைப்படத்தை 'மதயானைக்கூட்டம்' பட இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக 'கயல்' ஆனந்தி நடிக்கவுள்ளார். இந்த தகவலை சாந்தனு தனது சமூக வலைத்தளத்தில் உறுத்ஹி செய்துள்ளார். ஆனந்தியுடன் இணைந்து இந்த படத்தில் நடிப்பது தனக்கு மகிழ்ச்சி என்று கூறிய சாந்தனு, இந்த படத்திற்காக ஜஸ்டின் பிரபாகரன் ஒரு சூப்பர் பாடலை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

காதல், குடும்ப செண்டிமெண்ட், ஆக்சன் கலந்த 'இராவண கோட்டம்' திரைப்படம் ஒரு கிராமப்புற பின்னணியை கொண்ட கதையம்சம் கொண்டது என்பதும் இந்த படம் இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஒரு கதை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் சாந்தனு உள்பட படக்குழுவினர்களை தளபதி விஜய் பாராட்டியிருந்தார் என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.