'கயல்' சீரியலில் நடித்த நடிகை தற்கொலை முயற்சி.. என்ன நடந்தது?


Send us your feedback to audioarticles@vaarta.com


சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’கயல்’ என்ற சீரியலில் நடித்த நடிகை திடீரென தற்கொலை முயற்சி செய்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
’கயல்’ சீரியலில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை அமுதா சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை அமுதாவுக்கும் அவருடைய கணவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதால், நீண்ட நாட்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று, தனியாக வீட்டில் இருந்த அமுதா கழிப்பறையை சுத்தம் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும், இதை அறிந்த அவருடைய தோழி அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, அமுதா தற்கொலை முயற்சி செய்த தகவல் கிடைத்ததும், விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமுதாவின் கணவர் இடமும் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை அமுதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments