பாம்பை அசால்ட்டாக பிடித்து பக்கெட்டில் போட்ட தமிழ் நடிகை: வைரலாகும் வீடியோ 

  • IndiaGlitz, [Thursday,September 03 2020]

வீட்டுக்குள் வந்த பாம்பை பிடித்து அதை ஒரு பக்கெட்டில் போட்ட தமிழ் நடிகை ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பிரபல தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன், தனது வீட்டில் திடீரென ஒரு பாம்பு இருந்ததை கண்டார். உடனே அந்த பாம்பை அவர் பயமின்றி பிடித்து ஒரு பக்கெட்டில் போட்டு வெளியே கொண்டு சென்றார். இது குறித்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும், இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்ற நிலையில் தமிழ் நடிகை ஒருவர் அசால்டாக பாம்பை பிடித்து பக்கெட்டில் போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தும்பா என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை கீர்த்தி பாண்டியன், தற்போது ஹெலன் என்ற மலையாள படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தை ’இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பட இயக்குனர் கோகுல் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் அருண் பாண்டியனும் நடிக்க உள்ளார் என்பதும் படத்திலும் இவர்கள் இருவரும் அப்பா மகள் கேரக்டரில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வெளிநாட்டுக்கு செல்கிறதா 'பொன்னியின் செல்வன்' படக்குழு? பரபரப்பு தகவல் 

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' என்ற பிரம்மாண்டமான திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாய்லாந்தில் உள்ள அடர்ந்த காட்டில் நடந்தது.

ஆண்ட்ரியாவும் இல்லை, ராஷிகண்ணாவும் இல்லை: 'அரண்மனை 3' படத்தில் பேய் யார்?

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை' மற்றும் 'அரண்மனை 2' ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் இயக்கி வரும் திரைப்படம்

கார் பைக்கை அடுத்து சிலம்பம் கற்கும் பிக்பாஸ் நடிகை

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல நடிகர் நடிகைகள் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருந்து கொண்டே கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை குஷி ஆக்கி வந்தனர்.

கொரோனாவால் வியாபாரம் இல்ல… ஐஸ் கிரீமில் விஷம் கலந்து தாயும் மகளும் தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்!!!

கேரள மாநிலம் கண்ணூரில் கந்துவட்டி நெருக்கடி காரணமாக சொப்னா என்ற இளம் வயது பெண்மணி ஒருவர் தனது 2 மகள்களுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

என்னைக் கொல்ல சதி நடக்கிறது– ட்ரம்ப் மீது பரபரப்பு புகார் கூறிய இன்னொரு நாட்டு அதிபர்!!!

வெனிசுலா நாட்டின் அதிபரான நிக்கோலஸ் மதுரோ தன்னைக் கொல்ல அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டு இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.