ஜெயம் ரவிக்கு அக்காவாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்?

  • IndiaGlitz, [Tuesday,April 27 2021]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், ஜெயம் ரவிக்கு அக்காவாக நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. இந்த படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா ராஜேஷ், த்ரிஷா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் கேரக்டர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், குந்தவை கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. குந்தவை கேரக்டர் பொன்னியின் செல்வன் நாவலின்படி கார்த்தி நடித்துவரும் வந்தியத்தேவன் கேரக்டருக்கு ஜோடி என்பதும் ஜெயம்ரவியின் ராஜராஜசோழன் கேரக்டருக்கு அக்கா என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் நாவலை பொருத்தவரை குந்தவை மிகவும் வலிமையான கேரக்டர் என்பதால் அந்த கேரக்டருக்கு கீர்த்திசுரேஷ் பொருத்தமாக இருப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர், இருப்பினும் இந்த புகைப்படம் ரசிகர் ஒருவரால் உருவாக்கப்பட்டது என்றும், போலியானது என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.