தமிழில் பேச சொன்னபோது நடிகை கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,May 28 2023]

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெலுங்கில் பேசினார். அப்போது தமிழில் பேச சொன்னபோது அவர் அளித்த பதில் என்ன என்பதை பார்ப்போம்.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். தற்போது அவர் உதயநிதி ஸ்டாலின் உடன் நடித்த ’மாமன்னன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சகோதரி ரேவதி சுரேஷ், தந்தை சுரேஷ்குமார், தாய் மேனகா ஆகியோர்களுடன் திருப்பதிக்கு வந்திருந்த நிலையில் அவர் விஐபி தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டார். பின்னர் அவருக்கு கோவில் நிர்வாகிகள் தீர்த்த பிரசாதங்களை அளித்து வேத ஆசியும் வழங்கினார்.

இந்த நிலையில் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர் ’நீண்ட நாட்களுக்குப் பின்னர் திருப்பதி ஏழுமலையானை வழிபடுவது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது, எனது சகோதரி ரேவதி குறும்படம் இயக்கி இருக்கிறார், நானும் தெலுங்கில் ’போலோ சங்கர்’ படத்தில் நடித்து வருகிறேன் என்று கூறினார். அப்போது தமிழில் பேசுமாறு செய்தியாளர் கேட்டபோது ’நான் இப்போது திருப்பதியில் தான் இருக்கிறேன்’ என்று கூறி மீண்டும் தெலுங்கில் பேசினார்.

More News

ராகவா லாரன்ஸ் திருமண புகைப்படம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் இன்று தனது திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில் திருமண புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள்

'போட்டு வைப்போம், எவன் கேக்க போறான்': நடிகைகளுக்கு சவால் விடும் கிளாமரில் அஞ்சனா ரங்கன்..!

சின்னத்திரை தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் சமீபத்தில் பாண்டிச்சேரி சென்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கிளாமராக உள்ளதாக கமெண்ட்

விருது வழங்கும் விழாவில் வித்தியாசமான காஸ்ட்யூம்.. இப்படியெல்லாம் டிரஸ் இருக்கா ராஷி கண்ணா?

நடிகை ராஷி கண்ணா சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நிலையில் அவரது காஸ்டியூமை பார்த்த ரசிகர்கள் பல்வேறு விதத்தில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். 

எனக்கு 60 வயது இல்லை, காதலுக்கு வயது தடையில்லை: திருமணம் குறித்து ஆஷிஷ் வித்யார்த்தி..!

 நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி 60 வயதில் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியான நிலையில் 'தனக்கு 60 வயது இல்லை என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். 

'நம்ம தாசில்தார் சத்யபிரியாவா இது..? வாணிபோஜனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

நடிகை வாணி போஜன் தற்போது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருக்கும் நிலையில் அங்கிருந்தவாறு கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் சற்றுமுன் அவர் பதிவு செய்த