ஃபேமிலியுடன் டின்னர்: கீர்த்தி சுரேஷின் வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Saturday,March 27 2021]

தமிழ் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்துடன் டின்னர் சாப்பிடும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் நடிகை மேனகா தம்பதிகளின் இரண்டாவது மகளான கீர்த்தி சுரேஷ் தமிழில் விக்ரம் பிரபு நடித்த ’இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் ’ரஜினிமுருகன்’ ’ரெமோ’ ’பைரவா’ ’நடிகை திலகம்’ ’சீமராஜா’ ’சண்டக்கோழி 2’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

தற்போது தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள கீர்த்தி சுரேஷ், நடிகர் நிதின் உடன் நடித்த ’ராங் டே’ என்ற திரைப்படம் நேற்று வெளியானது என்பதும் இந்த திரைப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது திரைப்படம் ரிலீஸ் ஆன சந்தோஷத்தில் நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் கீர்த்தி சுரேஷ் டின்னர் சாப்பிடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதில் கீர்த்தி சுரேஷ் தனது அம்மா, அப்பா மற்றும் சகோதரி ரேவதி சுரேஷ் ஆகியோர்களுடன் உள்ளார். இந்த பதிவில் ’குடும்பத்துடன் சில நிமிடங்கள், ரேவதி சுரேஷூடன் நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு டின்னர்’ என்று கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு திரையுலக பிரபலங்கள் உள்பட சுமார் மூன்று லட்சம் பேர் லைக் செய்துள்ளனர் என்பதும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஆபாசப் படம் பார்த்த சிறுவனை நாடு கடத்திய அதிபர்! தொடரும் அதிரடி!

உலகிலேயே மர்மதேசமாக அறியப்படும் வடகொரியாவில் ஒரு சிறுவன் ஆபாசப் படம் பார்த்ததற்காக அச்சிறுவனின் ஒட்டுமொத்த குடும்பத்தையே  நாடு கடத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

புகழை அடுத்து பிஎம்டபிள்யூ கார் வாங்கிய 'குக் வித் கோமாளி' பிரபலம்: வைரல் வீடியோ

'குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 'குக்'களும் கோமாளிகளும் ஏற்கனவே பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் தான் என்றாலும்

'குக் வித் கோமாளி': அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4வது போட்டியாளர் இவரா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது என்பதும்

ஆயிரம் விளக்கு தொகுதி: எழிலனின் சர்ச்சை பேச்சால் குஷ்புவின் வெற்றி உறுதியாகிறதா?

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை குஷ்பு போட்டியிடும் நிலையில் அந்த தொகுதியில் திமுக வேட்பாளராக எழிலன் போட்டியிடுகிறார். இருவரும் ஆயிரம்விளக்கு தொகுதியில்

விவாகரத்தான மனைவியுடன் தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்ற பிரபல நடிகர்!

பிரபல நடிகர் ஒருவர் விவாகரத்தான முன்னாள் மனைவியுடன் தியேட்டருக்கு சென்று திரைப்படம் பார்க்கச் சென்ற புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.