close
Choose your channels

நான் அப்படி சொல்லவே இல்லை: கீர்த்தி சுரேஷ்

Saturday, May 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கிளாமர் ரோல்களில் நடிக்க மாட்டேன் என கீர்த்தி சுரேஷ் கூறியதாக தகவல் வெளியான நிலையில் 'நான் அப்படி சொல்லவே இல்லை’ என நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கமளித்துள்ளார் .

கிளாமர் கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்றும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கீர்த்தி சுரேஷ் கூறியதாக ஒரு சில ஊடகங்களில் தகவல் வெளியானது. இது குறித்து விளக்கமளித்த கீர்த்தி சுரேஷ், ‘கிளாமர் என்று நான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது என்றும் ஆபாசமான உடை அணிந்து நடிக்க மாட்டேன் என்று தான் கூறினேன் என்றும், நான் கூறிய கிளாமர் என்பது என்னை அழகான காண்பிக்கும் ரோலில் நடிப்பேன் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

மேலும் தற்போது உடல் எடையை குறைத்தது குறித்து கூறிய கீர்த்தி சுரேஷ், உடல் எடையை குறைந்ததால் மனதிற்கு உற்சாகமாக இருப்பதாகவும் இதையே தொடர்ந்து பராமரிக்க போகிறேன் என்றும், ஆனால் ஒரு சில ரசிகர்கள் தனது முந்தைய தோற்றத்தையே ரசிப்பதாக கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த ’சாணிக் காகிதம்’ மற்றும் ’சர்காருவாரு பாட்டா’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.