close
Choose your channels

ரசிகர்களுக்கு ஸ்டார் ஓட்டலில் விருந்து கொடுத்த கீர்த்தி சுரேஷ்: வைரல் வீடியோ!

Sunday, October 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தனது ரசிகர்களுக்கு ஸ்டார் ஓட்டலில் விருந்து கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தன்மீது பாசம் வைத்துள்ள ரசிகர்களுக்காக அவர் ஸ்டார் ஹோட்டலில் பிரமாண்டமான விருது கொடுத்து அசத்தியுள்ளார். சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தனது ரசிகர்களை வரவழைத்து அவர்களுக்கு சிறப்பு விருந்து அளித்து அவர்களுடன் கீர்த்தி சுரேஷ் சாப்பிட்டார்.

அதன் பிறகு ரசிகர் கொண்டு வந்திருந்த கேக்கை வெட்டிய கீர்த்தி சுரேஷ் அந்த கேக்கை ஒவ்வொரு ரசிகர்களுக்கு ஊட்டிவிட்டார். மேலும் அங்கு வந்திருந்த ஒவ்வொரு ரசிகர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்து அவர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

தனது ரசிகர்களை நேரில் சந்திக்கவே தயங்கும் நடிகைகள் மத்தியில் தனது ரசிகர்களை ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்த கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.