close
Choose your channels

கீர்த்தி சுரேஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு!

Wednesday, February 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’நடிகையர் திலகம்’ என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த அடுத்த படமான ‘மிஸ் இந்தியா’ திரைப்படம் மார்ச் 6ஆம் தேதி வெளியாகும் எனவும் இந்த திரைப்படம் மார்ச் 5ஆம் தேதியே அமெரிக்காவில் பிரிமியர் காட்சிகள் திரையிடப்படும் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது

கீர்த்தி சுரேஷின் 20 வது படமாக உருவாகியிருக்கும் மிஸ் இந்தியா’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரிலீஸ் தேதியில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் விரைவில் இந்த படத்தின் புரமோஷன் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தை ஈஸ்ட் கோஸ்ட் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நரேந்திர நாத் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். கீர்த்திசுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஜெகபதி பாபு, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் கீர்த்தி சுரேஷ் தற்போது ‘தலைவர் 168’ உள்பட மூன்று தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.