ஓடிடியில் கீர்த்திசுரேஷின் அடுத்த படம்: எத்தனை கோடிக்கு விலை போனது?

  • IndiaGlitz, [Monday,August 24 2020]

திரைப்பட படப்பிடிப்புக்கு மத்திய அரசு நேற்று அனுமதி அளித்துவிட்ட போதிலும் திரையரங்குகளை திறப்பது குறித்து இன்னும் மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஒருவேளை ஆகஸ்ட் 31க்கு பிறகு ஊரடங்கு உத்தரவில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படுமா? என்பது கேள்விக்குறியே. அப்படியே அனுமதி கொடுத்தாலும் பார்வையாளர்கள் எந்த அளவிற்கு திரையரங்குக்கு வருவார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் திரையரங்குகளில் திறக்கப்பட்டும் போதுமான ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர்களுக்கு கை கொடுக்கும் ஒரே அம்சமாக ஓடிடி பிளாட்பாரம் மட்டுமே உள்ளது. ஏற்கனவே தமிழில் ’பெண்குயின்’, பொன்மகள்வந்தாள் உள்பட ஒருசில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படமும் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்த ’மிஸ் இந்தியா’ என்ற திரைப்படமும் தற்போது ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது இந்த படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூபாய் 10 கோடிக்கு பெற்றுள்ளதாகவும் தற்போதைய நிலையில் இந்த தொகை சரியான தொகை என்றே தயாரிப்பாளர்கள் கருதுவதாகவும் கூறப்படுகிறது.

ஈஸ்ட் கோஸ்ட் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ’மிஸ் இந்தியா’ படத்தை நரேந்திர நாத் இயக்கியுள்ளார். கீர்த்திசுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ஜெகபதி பாபு, நதியா, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

More News

தனுஷால் இந்தி பட வாய்ப்பை மறுத்த 'ராட்சசன்' இயக்குனர்!

விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் ராம்குமார் இயக்கிய 'ராட்சசன்' திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி

ஒரே நேரத்தில் 6 இடங்களில் கடல் நீரை உறிஞ்சும் மேகம்!!! ஹாலிவுட்டையும் மிஞ்சும் அற்புதக்காட்சி!!!

ஒரே நேரத்தில் அருகருகே 6 இடங்களில் மேகம் கடல் நீரை நேரடியாக உறிஞ்சுவதைப் போன்ற ஒரு புகைப்படத்தை தினத்தந்தி வெளியிட்டு இருக்கிறது.

மலை மீது ஒரு கிமீ பயணம் செய்யும் மாணவ மாணவிகள்! ஆன்லைன் வகுப்பின் பரிதாபங்கள்!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த ஆன்லைன் வகுப்புகளை கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் இருப்பவர்கள்

'சூனா பானா'வுக்கு இபாஸ் கொடுத்த மதுரை மாவட்ட நிர்வாகம்: பரபரப்பு தகவல்

சூனா பானா என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது வடிவேலு காமெடி கேரக்டர் தான். இந்த பஞ்சாயத்த கலைக்க என்ன பாடு பட்டேன்,  போ போ போ... என சூனா பானா கேரக்டரில் நடித்த வடிவேலுவின் நடிப்பே தனி

கொரோனாவில் இருந்து மீண்டதும், மீண்டும் பணியை தொடங்கிய அமிதாப்!

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவருடைய மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆராதித்யா ஆகிய நால்வருக்கும்