கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. குரூப் புகைப்படம் வைரல்..!

  • IndiaGlitz, [Friday,May 26 2023]

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இதையடுத்து படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’ரகு தாத்தா’. இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கீர்த்தி சுரேஷ் மற்றும் படக்குழுவினர் அனைவரும் இருக்கும் குரூப் புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

கேஜிஎப்’ ’கேஜிஎப் 2’ மற்றும் ’காந்தாரா’ உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பலே நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும், ரிலீஸ் தேதி இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷ் ‘மாமன்னன்’, ‘போலா சங்கர்,’ ‘தசரா’ மற்றும் ‘சைரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

மணமகளுடன் செம்ம ஆட்டம்.. ஆஷிஷ் வித்யார்த்தியின் திருமண புகைப்படங்கள்..!

பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி நேற்று திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் திருமணத்திற்கு பின் மணமகளுடன் அவர் நடனம் ஆடியது உள்பட

'ஜப்பான்' படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபலம்.. கமல்ஹாசன் காரணமா?

நேற்று கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் 'ஜப்பான்' படத்தின் இண்ட்ரோ வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரலான நிலையில் தற்போது இந்த படத்தில் பணிபுரிந்த பிரபலம்  ஒருவர் வெளியேறி

கவின் படத்திற்கு முதல்முறையாக இசையமைக்கும் அனிருத்: நாயகியும் அறிவிப்பு..!

 'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின், நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக வெளியான செய்தியை பார்த்தோம்.

தமிழக முதல்வருக்கு சர்ப்ரைஸ் அளித்த ஜப்பான் ரஜினி ரசிகர்கள்..!

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஜப்பான் சென்ற நிலையில் அங்கு ரஜினி ரசிகர்கள் அவருக்கு சர்ப்ரைஸ் அளித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

லிவ்-இன் உறவிலிருந்த பெண்ணை 6 துண்டுகளாக வெட்டிய காதலன்… ஃப்ட்ரிஜில் வைத்து பாதுகாத்த கொடூரம்!

ஹைதராபாத்தில் வசித்துவந்த நபர் ஒருவர் தன்னுடன் லிவ்-இன் உறவுமுறையில் வாழ்ந்துவந்த பெண்ணையே கொன்று அவருடைய உடலை 6 துண்டுகளாக வெட்டி