த்ரிஷா பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷ் செய்த தரமான சம்பவம்.. வைரல் வீடியோ..

  • IndiaGlitz, [Monday,May 06 2024]

நடிகை த்ரிஷா பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷ் செய்த தரமான சம்பவம் குறித்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை த்ரிஷா சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும் த்ரிஷா பிறந்தநாள் குறித்த ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் த்ரிஷா பிறந்தநாளில் அவர் விஜய்யுடன் நடித்த சமீபத்தில் வெளியான ’கில்லி’ திரைப்படத்தை அவரது பிறந்தநாளில் பார்த்து அவருக்கு வாழ்த்து சொல்ல கீர்த்தி சுரேஷ் திட்டமிட்டு இருந்தாராம்.

ஆனால் அன்றைய தினம் ’கில்லி’ படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்பதால் நேற்று இந்த படத்தை பார்த்த கீர்த்தி சுரேஷ் படம் பார்த்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து த்ரிஷாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

நேற்று த்ரிஷாவின் இந்த படத்தை பார்த்து நான் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை, எனவே இன்று அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கீர்த்தி சுரேஷ் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

குமரிமுத்து பேட்டியின் வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்.. என்ன சொல்ல வருகிறார்?

மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அளித்த பேட்டியின் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்

'தல ரஜினி இன்னும் மாறவே இல்லை.. ரஜினி எப்போ 'தல' ஆனார்.. பிரபலத்தின் பதிவு..!

'தல ரஜினிகாந்த் இன்னும் மாறவே இல்லை என்றும் அவர் கிரேட்டஸ்ட் நபர்' என்று பிரபலம் ஒருவர் தான் அது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் 'ரஜினி எப்போ தல ஆனார்' என்று ரசிகர்கள் கேள்வி

'நடக்க வேண்டிய நேரத்துல கரெக்டா நடக்கும்.. ரஜினியின் 'கூலி' படத்தின் மாஸ் அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் முக்கிய பணியாற்றும் ஒருவர் மாஸ் அப்டேட் கொடுத்த

குஷ்பு அக்காவுக்கு எனது நன்றி.. மாஸ் வீடியோவை வெளியிட்ட சிம்ரன்..!

குஷ்பு அக்காவுக்கும், சுந்தர் சி சார் அவர்களுக்கும் நன்றி என நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிறந்தநாளில் விஜய் கட்டிய சாய்பாபா கோவிலுக்கு சென்றாரா த்ரிஷா? வைரல் புகைப்படம்..!

நடிகை த்ரிஷா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இன்று அவர் சில புகைப்படங்களை பதிவு செய்து  தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.