close
Choose your channels

'மாமன்னன்' இசை வெளியீட்டு விழாவில் திருமணம் குறித்து மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்..!

Friday, June 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் இந்த விழாவில் கலந்துகொண்ட நாயகி கீர்த்தி சுரேஷ் 'என்னை கல்யாணம் செய்து கொடுப்பதிலேயே இருக்கிறீர்கள்’ என்று காமெடியாக கூறினார்.

இந்த படம் குறித்து கீர்த்தி சுரேஷ் குறித்து கூறிய போது, ‘இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமான கதையம்சம் கொண்டது, இந்த படம் வேற ஒரு ரூட்டில் செல்கிற படம், இந்த படம் எல்லாருக்கும் பிடிக்கும், கண்டிப்பாக வித்தியாசமான படமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இந்த படத்தில் ஒரு பொதுவான வித்தியாசத்தை பற்றி பேசியிருக்கிறோம், கண்டிப்பாக ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த படம் கனெக்டிவாக இருக்கும் என்று தெரிவித்தார்

மேலும் படப்பிடிப்பின் போது நான், உதயநிதி மற்றும் வடிவேல் ஆகியோர் கலகலப்பாக ஜாலியாக இருப்போம் எங்களை வைத்து சீரியசான காட்சி எடுக்க இயக்குனர் மாரி செல்வராஜ் ரொம்ப கஷ்டப்பட்டார், படப்பிடிப்பில் நாங்கள் கலகலப்பாக இருந்தாலும் படம் ரொம்ப சீரியஸாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் ‘திருமணம் குறித்த வதந்திக்கு ஏற்கனவே பதில் கூறிவிட்டேன், எனக்கு எப்போது திருமணம் என்பதை கண்டிப்பாக விரைவில் கூறுகிறேன், என்னை கல்யாணம் பண்ணி அனுப்புவதிலேயே இருக்கிறீர்கள்’ என்றும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.