close
Choose your channels

சம்மரில் மஞ்சளில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்: 5 மணி நேரத்தில் 7 லட்சம் லைக்ஸ்!

Thursday, April 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையும் ’நடிகையர் திலகம்’ என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றவருமான கீர்த்திசுரேஷ், தற்போது ரஜினியின் ’அண்ணாத்த’ செல்வராகவனின் ’சாணிக்காகிதம்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஒருசில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

மேலும் கீர்த்திசுரேஷ் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார் என்பதும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே. கீர்த்திசுரேஷ்க்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 9 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராமில் மஞ்சள் நிறத்தில் சேலை அணிந்த கிளாமர் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து ’இந்த சம்மர் காலத்தில் இந்த மஞ்சள் உடையை விட வேறு எது பெட்டராக இருக்கும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பதிவு செய்துள்ள இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் இந்த புகைப்படத்தை பதிவு செய்த 5 மணி நேரத்தில் சுமார் 7 லட்சம் லைக்ஸ் குவிந்து உள்ளத்திலிருந்தே இந்த புகைப்படம் எந்த அளவுக்கு ரசிகர்களை ரீச் செய்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.