கீர்த்தி சுரேஷின் 3 நிமிட யோகா வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Tuesday,June 22 2021]

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21ம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்படும் என்பதும் இந்த தினத்தில் பிரபலங்கள் பலர் தாங்கள் யோகா செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவார்கள் என்பதும் அவை மிகப் பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே

குறிப்பாக நேற்றைய தினம் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் யோகா செய்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், தான் யோகா செய்த புகைப்படங்களையும் வீடியோவையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்

குறிப்பாக அவர் யோகா செய்யும் மூன்று நிமிட வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மிக நேர்த்தியாக அவர் யோகா செய்யும் முறையை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

வெளியில் நடப்பதை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் உள்ளே என்ன நடக்கிறது என்பதை நீங்கள் எப்போதும் கட்டுப்படுத்தலாம். இனிய சர்வதேச யோகா நாள்! இந்த அழகான பயணத்தின் மூலம் என்னை அழைத்துச் சென்ற எனது குருவுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

'புன்னகை தேசம்' பட நடிகரின் மனைவி காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகை சேர்ந்த சிலர் காலமாகி வருவது தமிழ் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று கூட தமிழ் நடிகர் கலைமாமணி அமர

கமல்ஹாசனை சந்தித்தது ஏன்? நடிகர் கருணாஸ் விளக்கம்!

உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசனை நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் இன்று சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார்

தன் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு சென்று நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுப்பாரா சூர்யா? காயத்ரி ரகுராம் கேள்வி!

நீட் தேர்வுக்கு எதிராக சமீபத்தில் சூர்யா நீண்ட அறிக்கையை வெளியிட்டு இருந்தார் என்பதும் அந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூர்யாவின் இந்த அறிக்கைக்கு

சிம்புவின் 'மாநாடு' ஃபர்ஸ்ட் சிங்கிள்: 'மெஹரிஸ்ல்லா' பாடல் வைரல்!

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'மாநாடு'. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த

பிக் பேபியை பெற்றெடுத்த சாதனை தாய்… குவியும் வாழ்த்து!

அசாம் மாநிலத்தில் இளம்பெண் ஒருவருக்கு 5.2 கிலோ கிராம் எடையுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.