close
Choose your channels

கார்த்திக் சுப்புராஜ்-கீர்த்தி சுரேஷின் டைட்டில் குறித்த தகவல்

Wednesday, October 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனுஷ் நடித்து வரும் படத்தை இயக்கி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

கீர்த்திசுரேஷின் 24 வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் நாளை காலை 11.11 மணிக்கு அறிவிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

நாளை அக்டோபர் 17ஆம் தேதி கீர்த்திசுரேஷின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் அவரது ரசிகர்களுக்கு இந்த டைட்டில் போஸ்டர் ஒரு விருந்தாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையில், கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், அணில் கிரிஷ் படத்தொகுப்பில், சக்தி வெங்கட்ராஜ் கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.