விஜய் சொன்ன ரெண்டு வார்த்தையே மிக அதிகம். கீர்த்திசுரேஷ்

  • IndiaGlitz, [Thursday,December 22 2016]

மிக குறுகிய காலத்தில் இளையதளபதி விஜய், சூர்யா போன்ற பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற அதிர்ஷ்டக்கார நடிகை கீர்த்திசுரேஷ், தற்போது பொங்கலுக்கு வெளியாகும் 'பைரவா' படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றார். இந்த படத்தின் ரிலீசுக்கு பின்னர் அவருடைய மார்க்கெட் கிராஃப் எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பைரவா' படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கீர்த்திசுரேஷ் கூறியதாவது: 'சின்ன வயதில் விஜய்யின் ரசிகையாக இருந்த நான், அவருக்கு ஜோடியாக நடிப்பது நிச்சயம் அதிர்ஷ்டம்தான். எல்லோரும் கூறுவதுபோல் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் அதிகம் பேச மாட்டார் என்பது உண்மைதான். ஆனால் படப்பிடிப்பு முடிந்த தினத்தில் விஜய் என்னிடம்' நல்லா நடிச்சிருக்கீங்க' என்று இரண்டே வார்த்தைகளில் என்னுடைய நடிப்பை புகழ்ந்தார்.

விஜய் இந்த ரெண்டு வார்த்தையில் பாராட்டியதே மிக அதிகம் என்று படக்குழுவினர் கூறினர். விஜய்யின் இந்த பாராட்டால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

More News

கார்த்தியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

'காஷ்மோரா' படத்தின் பின்னர் கார்த்தி தற்போது பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'காற்று வெளியிட'

தலைமை வீட்டை அடுத்து மேலும் ஒரு முக்கிய ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் சோதனை

தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக தலைமைச்செயலாளர் ராம்மோகன்ராவ் வீட்டிலும் அவருடைய மகன் மற்றும் உறவினர்...

விஜயகாந்த் டைட்டிலுக்கு மாறிய விக்ரம் பிரபுவின் 'முடிசூடா மன்னன்'

விக்ரம் பிரபு நடித்த 'முடிசூடா மன்னன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்...

4 வருடங்களில் 11 திருமணம். கோடிக்கணக்கில் பணம், நகை சுருட்டிய இளம்பெண் கைது

கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து நான்கு வருடங்களில் அடுத்தடுத்து 11 பேர்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம்...

தலைமைச்செயலாளர் வீட்டை அடுத்து தலைமைச்செயலகத்திலும் ரெய்டு. துணை ராணுவம் திடீர் குவிப்பு!

சமீபத்தில் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரி ரெய்டில் சிக்கிய ஆவணங்களின்...