close
Choose your channels

கீர்த்தி சுரேஷின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

Monday, August 19, 2019 • தமிழ் Comments

'நடிகையர் திலகம்' திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சமீபத்தில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்திசுரேஷ் தற்போது பாலிவுட்டில் போனிகபூர் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அஜய்தேவ்கான் ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடித்து வரும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு 'மெய்டன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 1952ஆம் ஆண்டு 1962ஆம் ஆண்டு வரை இந்திய கால்பந்து அணிக்கு தலைமை தாங்கிய சயிது அப்துல்ரஹிம் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தான் இந்த படத்தின் கதை. இவரது தலைமையின் கீழ்தான் இந்திய கால்பந்து அணி, ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றாது. அதேபோல் 1956ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதிக்கு இந்திய அணி சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சயிது அப்துல்ரஹிம் கேரக்டரில் அஜய்தேவ்கானும், அவரது மனைவியாக கீர்த்திசுரேஷூம் நடித்து வரும் இந்த படத்தை அமித்ஷர்மா இயக்கி வருகிறார். இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. கீர்த்திசுரேஷின் முதல் பாலிவுட் படம் சூப்பர் ஹிட்டாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Get Breaking News Alerts From IndiaGlitz