close
Choose your channels

கீர்த்தி சுரேஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Sunday, March 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கீர்த்தி சுரேஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

தளபதி விஜய்யுடன் 'தளபதி 62', விக்ரமுடன் 'சாமி 2', விஷாலுடன் 'சண்டக்கோழி 2' ஆகிய படங்களில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்துள்ள இன்னொரு படம் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

தமிழில் 'நடிகையர் திலகம்', தெலுங்கில் 'மகாநதி' என்ற பெயர்களில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் சாவித்ரி கேரக்டரில் கீர்த்திசுரேஷூம், ஜெமினி கணேசன் கேரக்டரில் துல்கர் சல்மானும், மற்றொரு முக்கிய கேரக்டரில் சமந்தாவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் மே மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை நாக் அஸ்வின் என்பவர் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.