கீர்த்தி சுரேஷின் 3 மொழி பிரமாண்டமான படம் குறித்த தகவல் 

  • IndiaGlitz, [Tuesday,March 05 2019]

நடிகையர் திலகம் படத்தை அடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ் ஒருசில படங்களில் நடித்தாலும், அந்த படங்கள் அவரது நடிப்பை வெளிப்படுத்தும் படங்களாக இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் மீண்டும் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படம் ஒன்றில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தை நாகேஷ் என்ற தெலுங்கு இயக்குனர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'ஐதராபாத் புளூஸ்', 'இஃபால், தனக்' போன்ற தெலுங்கு படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமும், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.