என்னுடைய இதயத்தை வென்றவர்கள்: கீர்த்திசுரேஷின் வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Friday,April 16 2021]

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம் தேதி உலக கலை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் இந்த தினத்தில் உலகிலுள்ள ஓவிய கலைஞர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருந்து வருகிறது என்பதும் தெரிந்ததே

அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷின் புகைப்படங்களை ஆர்ட் மூலம் ரசிகர்கள் வரைந்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இந்த ஓவியங்கள் அச்சுஅசலாக இருப்பதை அறிந்த கீர்த்தி சுரேஷ் தன்னுடைய ஓவியங்களை வரைந்த ஓவியர்களுக்கு தனது நன்றியை தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில் ’என்னுடைய இதயத்தை வென்ற ஓவியர்கள்’ என்ற தலைப்பில் குறிப்பிட்டு, ரசிகர்கள் வரைந்த ஓவியங்களின் தொகுப்புகளை அவர் அதில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தன்னுடைய புகைப்படத்தை வரைந்த அனைவருக்கும் தனது நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’அண்ணாத்த’ செல்வராகவனுடன் ’சாணிக்காகிதம் உள்பட்ட சில திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஒரே படுக்கையில் இரண்டு கொரோனா நோயாளிகள்: டெல்லி மருத்துவமனையின் அவலம்!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தினமும் ஆயிரக்கணக்கானோர்

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நடிகரின் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரின் திரைப்படம் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பி முத்துராமன் உடல்நிலை: மருத்துவமனை அறிக்கை!

ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களின் வெற்றி படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குநர் எஸ்பி முத்துராமன் அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வெட்டிக்கொலை… முன்விரோதம் காரணமா?

ஆந்திரமாநிலம் விசாகப்பட்டிணம் மாவட்டத்தை அடுத்த ஜுட்டாடா கிராமத்தைச் சேர்ந்தவர் ராமாராவ்.

கொத்தாக குவியும் சடலங்கள்...!உபியில் ஆற்றங்கரையில் நடக்கும் சோகம்....! தகரம் வைத்து மறைத்த அரசு...!

உத்திரபிரதேச மாநிலம்,லக்னோவில், கோமதி ஆற்றங்கரையில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏராளமான சடலங்கள் எரிக்கப்பட்டு வருகின்றன.