முதலமைச்சர் கோப்பையை கைப்பற்றிய சுசீந்திரன் பட நடிகைகள்

  • IndiaGlitz, [Tuesday,February 26 2019]

பிரபல இயக்குனர் சுசீந்திரன் தற்போது 'கென்னடி கிளப்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது

இந்த படத்தில் உள்ள 'கென்னடி கிளப்' என்ற கபடி டீமில் ஏழு நிஜ கபடி வீராங்கனைகள் நடித்து வருகின்றனர். இவர்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருவதோடு, முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியிலும் விளையாடி வருகின்றனர். இவர்களது வெண்ணிலா கபடி குழு இந்த ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை போட்டியில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது

சமீபத்தில் திருச்செங்கோட்டில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையை ‘கென்னடி கிளப்’ படத்தில் நடித்துவரும் வீராங்கனைகளின் வெண்ணிலா கபடி குழு சாம்பியன் பட்டம் பெற்றதோடு, ரூ.12 லட்சத்திற்கான பரிசுத்தொகையையும் வென்றது.
இந்த வெற்றி இந்த வீராங்கனைகளை மட்டுமின்றி 'கென்னடி கிளப் படக்குழுவினர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சுசீந்திரன் இயக்கி வரும் இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா, சசிகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி.இமான் இசையில் ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வருகிறது.
 

More News

சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2: மொத்த ஸ்வீட்டையும் தானம் வழங்கிய கடை ஓனர்

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என ஒட்டுமொத்த இந்தியாவே குரல் கொடுத்த நிலையில் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இன்று அதிகாலை பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை

பக்கா பிளான்: எம்ப்ரேயர் விமானத்தால் சாத்தியமான சக்சஸ் தாக்குதல்

இன்று அதிகாலை இந்திய விமானப்படையின் 12 மிராஜ் 2000 ரக விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து வெற்றிகரமாக தீவிரவாதிகளின் முகாம்களை அழித்து எந்தவித உயிர்ச்சேதமும் இன்றி திரும்பி வந்தன.

'தளபதி 63' தீபாவளி ரிலீஸில் திடீர் மாற்றம்?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்தியாவின் பதிலடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

புல்வாமா தாக்குதலுக்கு பலியான 40 இந்திய பாதுகாப்பு படை வீரர்களின் வீரமரணத்திற்கு பதிலடி தரும் வகையில் இன்று இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலுக்கு பாராட்டுக்கு குவிந்து வரும்

இந்திய தாக்குதலால் எந்த சேதமும் இல்லை: பாகிஸ்தான் ராணுவ தளபதியின் அண்டப்புழுகு

இன்று அதிகாலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன.