சச்சின் திரைப்படத்தை உற்சாக்ப்படுத்தும் இந்திய மாநிலங்கள். தமிழகமும் சேருமா?

  • IndiaGlitz, [Friday,May 19 2017]

கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'சச்சின் எ பில்லியன் டிரீம்ஸ்' திரைப்படம் வரும் 26ஆம் தேதி தமிழ், உள்பட பல மொழிகளில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெளியாகவுள்ளது. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்திற்கு கேரளா மற்றும் சத்தீஷ்கர் மாநில அர்சுகள் வரிவிலக்கு சலுகை அளித்து உற்சாகம் அளித்துள்ளன

இந்த படத்தை அனைத்து மக்களும் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் வரிவிலக்கு அளித்துள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழகம் உள்பட இன்னும் ஒருசில மாநிலங்கள் விரைவில் வரிவிலக்கு சலுகை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேரி கோம், தோனி உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் போலவே இந்த படமும் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று படக்குழுவினர் இரவுபகலாக புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 200 நாட் அவுட் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் சச்சின் தெண்டுகல்கரே தனது வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

More News

பாடல் வெளியீட்டுக்கு பதில் ஆக்சன் வெளியீட்டு விழா: மிஷ்கினின் வித்தியாசமான முயற்சி

விஷால் நடிப்பில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் மிஷ்கின் தெரிவிக்கையில் ஹாலிவுட்டில் வெளிவரும் ஷெர்லாக்

போர் வரும்போது பார்த்துக் கொள்வோம். ரஜினிகாந்த்

இன்று  ஐந்தாவது நாளாக ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், ரசிகர்களிடையே பேசியதாவது...

நான் பச்சை தமிழன். என்னை தூக்கி போட்டால் இமயமலையில் தான் விழுவேன்! ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 15ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில் இன்று நான்காவது நாளாக கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்திக்கின்றார்...

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதிய நிலையில் இந்த தேர்வின் முடிவுகளை இன்று காலை 10 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி காலை 10 மணிக்கு வெளியிடுகிறார்...

விஷாலின் அட்வான்ஸ் ஐடியாவுக்கு மாஸ் நடிகர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்களா?

நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற உண்மையான நோக்கத்துடன், முழு ஈடுபாடுடன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் விஷாலுக்கு அவ்வப்போது திரைத்துறையிலேயே மறைமுகமாக பல்வேறு இடைஞ்சல்கள் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது...