close
Choose your channels

வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உணவுப் பொட்டலத்தோடு இன்ப அதிர்ச்சியாக ரூ.100 ஐ ஒட்டி வழங்கிய பெண்!!!

Wednesday, August 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உணவுப் பொட்டலத்தோடு இன்ப அதிர்ச்சியாக ரூ.100 ஐ ஒட்டி வழங்கிய பெண்!!!

 

தென்மேற்கு பருவமழையால் தற்போது கேரளாவின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு சாதாரண மக்கள் உணவுக்கே திண்டாடும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து தவித்து வரும் சிலருக்கு இந்தப் பருவமழை மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் எர்ணாகுளம் பகுதியைச் சார்ந்த ஒரு பெண் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவித்து வரும் மக்களுக்கு உணவுப் பொட்டலத்தோடு சேர்ந்து 100 ரூபாய் நோட்டை வாங்குபவர்களுக்குத் தெரியாமல் ஒட்டிக் கொடுத்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். எர்ணாகுளம் அடுத்த கும்பலங்கி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மேரி செபஸ்டியன். இவரின் கணவர் தற்போது கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து வீட்டில் இருக்கிறார். மேரிக்கும் சென்ற மாதத்தில் பாதி நாட்கள் தான் வேலை இருந்தது.

இப்படி பல கஷ்டத்தை அனுபவித்தாலும் கிடைத்த வருமானத்தில் மற்றவர்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு மேரி தன்னுடைய வீட்டில் உணவுகளைத் தயாரித்து கடந்த சில தினங்களாக உணவுப் பொட்டலங்களை பொது இடங்களில் வழங்கி வருகிறார். உணவுப் பொட்டலங்களோடு செல்லோ டேப் போட்டு ரூ.100 நோட்டையும் அவர் உள்ளே மடித்து வைத்திருக்கிறார். உணவை பிரித்து சாப்பிட ஆரம்பிக்கும்போது தான் உள்ளே பணம் இருந்தது பலருக்கும் தெரிய வந்திருக்கிறது. இதனால் இன்ப அதிர்ச்சிக்கு ஆளான சிலர் மேரியிடம் விசாரித்து இருக்கின்றனர்.

அதற்கு, “கேரளா முழுவதும் கனமழை பெய்துவருகிறது. நான் இந்த சமயத்தில் நிறைய டீ குடிப்பேன். நான் கொடுக்கும் பணம் சிலருக்கு டீ குடிக்கவாவது பயன்படட்டுமே என நினைத்து வைத்தேன்” என நெகிழ்ச்சிப் பொங்க கூறியிருக்கிறார். இவருடைய கருணை உள்ளத்தைக் கண்டு பலரும் தற்போது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.