CAA-க்கு ஆதரவளித்த ஆளுநர் எங்களுக்கு வேண்டாம்.. கேரளா சட்ட பேரவையில் அமளி..!

  • IndiaGlitz, [Wednesday,January 29 2020]

 

கேரள சட்டப்பேரவையில் சிஏஏ-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை விமர்சித்த ஆளுநர் ஆரிப் முகமது கானை குடியரசுத்தலைவர் திரும்ப பெற வேண்டும் என கேரள எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

கேரள சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்த எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இடது ஜனநாயக முன்னிணி அரசால் சட்டசபையின் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் அமர்வின் தொடக்க உரையில், சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றிய விமர்சங்களும் இடம்பெற்றது.

இதுதொடர்பாக ஆளநர் தனது தொடக்க உரையை அளிக்கும் போது, இதை நான் வாசிக்க வேண்டும் என முதல்வர் விரும்புவதால் நான் இந்த பத்தியை வாசிக்கப் போகிறேன். எனக்கு சிஏஏ தொடர்பாக வேறு பார்வை இருந்தாலும், இது கொள்கை அல்லது திட்டத்தின் கீழ் வராது. இது அரசின் பார்வை என்று முதல்வர் கூறியுள்ளார். அவருடைய விருப்பத்திற்கு மதிப்பளிப்பதற்காக நான் இந்த பத்தியை வாசிக்கப்போகிறேன் என்று அவர் கூறினார்.

முன்னதாக, கேரள சட்டப்பேரவையில் சிஏஏ-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, இதுபோன்ற தீர்மானங்களால் பயனில்லை என்றும், மத்திய அரசின் சட்டத்தை மாநிலங்கள் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று அம்மாநில ஆளநர் ஆரிப் முகமது கான் கூறினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. கேரள சட்டப்பேரவையை அவமதித்த ஆளுநர் ஆரிப் முகமது கானை ஜனாதிபதி திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், கேரள சட்டசபையில் இன்று முதல்வர் பினராயி விஜயனும், சபாநாயகர் பி.ஸ்ரீ.ராமகிருஷ்ணனும் பட்ஜெட் தொடக்க உரையை வழங்க ஆளுநரை அழைத்தனர். அப்போது, எதிர்கட்சிகள் ஆளுநரை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அவை காவலர்கள் பாதுகாப்புடன் மனித சங்கிலி அமைக்கப்பட்டு ஆளுநர் மேடையை அடைந்து தனது உரையை வழங்கினார். எனினும், பதாகைகளை பிடித்த படி, எதிர்கட்சி எம்எல்ஏக்கள் 'கோ பேக்' கோஷங்களை எழுப்பினர்.

More News

“நாங்கள் இந்தியர்கள் அதுதான் எங்கள் மதம்” – பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கருத்து

இந்தியாவின் 71 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இந்திய மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத் தளங்களின் மூலம் பகிர்ந்து கொண்டனர்.

திரைப்படம் ஆகிறது பொள்ளாச்சி விவகாரம்: ஐபிஎஸ் அதிகாரி கேரக்டரில் பிரபல நடிகர்

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி விவகாரம் குறித்த தமிழ்ப்படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் அரவிந்தசாமி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டாரா? பாலிவுட் சூப்பர் ஸ்டாரா? ரஜினி குறித்து குழம்பிய இயக்குனர் பியர் கிரில்ஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று 'மேன் வெர்சஸ் வைல்ட்' என்ற ஆவணப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பதும் இந்த படத்தை டிஸ்கவரி சேனலுக்காக பியர் கிரில்ஸ் என்ற

சீனாவில் இருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை – வெளியுறவு செய்தி தொடர்பாளர் தகவல்

முன்னதாக சீனாவில் வுஹான் மாகாணத்தில் மட்டுமே கொரோனா ("novel" coronavirus) வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

நாடகக்காதல்: இயக்குனர் நவீனுக்கு 'திரெளபதி' இயக்குனரின் கேள்வி!

சமீபத்தில் வெளியான 'திரெளபதி' படத்தின் டீசர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் நாடகக் காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படும்