ஸ்பை வேலை பார்த்த போக்குவரத்து கேமரா… கணவன், மனைவியிடம் மாட்டிய தரமான சம்பவம்!

  • IndiaGlitz, [Thursday,May 11 2023]

சாலையில் பொருத்தப்பட்டு இருந்த போக்குரத்துத் துறை கேமரா ஒன்று எடுத்த புகைப்படத்தால் தற்போது ஒரு கணவன் மனைவிக்குள் பூகம்பகம் ஏற்பட்டு இருக்கும் சம்பவம் கேரளாவில் பேசுபொருளாகி இருக்கிறது.

சாலையில் செல்லும் வாகனஓட்டிகள் விதிமீறலில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு கேரளாவில் பாதுகாப்பான கேரளா எனும் திட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இந்தத் திட்டத்தில் ஊழல் நடவடிக்கைகள் நடைபெற்று இருப்பதாக அம்மாநில எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியிருக்கும் இந்த வேளையில் தற்போது போக்குவரத்துத் துறை கேமரா செய்த ஒரு வேலையால், ஒரு தம்பதிகளுக்குள்ளும் பிரச்சனை வெடித்திருக்கிறது.

கேரளாவின் கரமனா பகுதியில் வசித்துவரும் 32 வயதான இளைஞர் ஒருவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி அவர் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது வேறொரு பெண்ணுடன் சென்றுள்ளார். ஆனால் அவர்கள் இருவருமே ஹெல்மெட் அணியாமல் சென்ற நிலையில் அதை சென்சார் கேமரா புகைப்படமாக எடுத்திருக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட அந்த வாகனத்தின் சொந்தக்காரருக்கு அபராதம் செலுத்தும்படி போக்குரத்துத் துறையில் இருந்து குறுஞ்செய்தியுடன் ஆதாரத்திற்காக இந்த புகைப்படமும் அனுப்பப்பட்டு இருக்கிறது.

அந்தப் புகைப்படத்தில் வேறொரு பெண் இருப்பதைப் பார்த்த இளைஞரின் மனைவி இதுகுறித்து கணவனிடம் விசாரித்து இருக்கிறார். முதலில் அந்தப் பெண் யாரென்றே தெரியாது என கணவன் சமாளித்திருக்கிறார். ஆனால் அதை நம்பாத மனைவி தொடர்ந்து கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் கோபமடைந்த கணவன், தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த மனைவி தற்போது கரமனா காவல் துறையில் புகார் அளித்த நிலையில் சம்பந்தப்பட்ட கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து விதிமீறலுக்காக சென்சார் கேமரா எடுத்த ஒரு புகைப்படத்தால் குடும்பத்திற்குள் சச்சரவு ஏற்பட்டு தற்போது கைது வரை சென்றிருக்கும் சம்பவம் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
 

More News

மீண்டும் ஒரே படத்தில் ஐஸ்வர்யாராய்-த்ரிஷா? அதுவும் யார் படத்தில் தெரியுமா?

மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்தனர் என்பதும் நந்தினி மற்றும் குந்தவை ஆகிய கேரக்டர்களில் இருவரும்  மிக அபாரமாக

'வலிமை' நாயகியின் வேற லெவல் கிளாமர்.. பிரபல நடிகையை கட்டிப்பிடித்து முத்தம்.. வைரல் வீடியோ..!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஹூமா குரேஷி வேற லெவல் கிளாமர் உடை அணிந்து பிரபல நடிகை ஒருவருக்கு முத்தம் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஹேய் பொண்டாட்டி.. திருமண நாளில் மனைவி சினேகாவை கொஞ்சிய பிரசன்னா.. வைரல் புகைப்படங்கள்..!

நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகா திருமணநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தனது திருமண நாளில் 'ஹேய் பொண்டாட்டி' என்று தொடங்கி ஒரு பதிவை பிரசன்னா தனது

'மாமன்னன்' திரைப்படம் மாரி செல்வராஜ் சினிமா யுனிவர்ஸ் படமா? ஆச்சரிய தகவல்..!

பொதுவாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களில் தான் அவரது முந்தைய படங்களின் கேரக்டர்கள் வரும் என்றும் எனவே அவரது படங்களை எல்சியூ படங்கள் அதாவது லோகேஷ் சினிமா யுனிவர்ஸ் என்று

6ஆம் வகுப்பு படிக்கும்போது கிரிக்கெட் வீரரை காதலித்தேன்: ஐஸ்வர்யா லட்சுமி

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும்  பூங்குழலி என்ற கேரக்டரில் அற்புதமாக நடித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தான் ஆறாம் வகுப்பு