close
Choose your channels
Kaatrin Mozhi

விஜய், சூர்யாவுக்கு பாராட்டு தெரிவித்த கேரள அமைச்சர்

Tuesday, September 4, 2018 • தமிழ் Comments

சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் அம்மாநிலமே பெருந்துன்பத்தில் மூழ்கியிருந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் இருந்து முதன்முதலில் உதவிக்கரம் நீட்டியது நடிகர் சூர்யாதான். அவருக்கு பின்னர் பல கோலிவுட் திரையுலகினர் கேரள வெள்ள நிவாரண நிதியாக லட்சக்கணக்கிலும் கோடியிலும் வழங்கினார்கள்

இந்த நிலையில் இதுகுறித்து  கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் காடம்பள்ளி சுரேந்திரன் கூறியபோது, தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்களோடு ஒப்பிடும்போது மலையாள நடிகர்களின் வெள்ள நிவாரண நிதி மிகவும் குறைவாகவே உள்ளது. தமிழ் நடிகர்கள் விஜய், சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்பட பலர் தாராளமாக நிதி வழங்கியுள்ளனர். ஆனால் கோடிக்கணக்கான மதிப்புடைய கார்கள் வைத்திருக்கும் மலையாள நடிகர் மிக்குறைந்த அளவே நிதியுதவி செய்துள்ளனர் என்பது வருத்தத்தற்குரிய விஷயம்தான். உதவி செய்யும் மனப்பான்மை குறித்து மலையாள நடிகர்கள், தமிழ், தெலுங்கு நடிகர்களை பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சுரேந்திரன் கூறியுள்ளார்

ஏற்கனவே இதே கருத்தை பிரபல நடிகை ஷீலா உள்பட ஒருசிலர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்டக்கது.