மோசமான பெண்கள் வாய்ப்புக்காக இதையும் செய்வார்கள்: பிரபல நடிகர் சர்ச்சை பேச்சு

  • IndiaGlitz, [Thursday,July 06 2017]

பிரபல மலையாள நடிகர், எம்பி மற்றும் மலையாள நடிகர் சங்கமான 'அம்மா' அமைப்பின் தலைவராக இருந்து வரும் இன்னொசெண்ட், மோசமான பெண்கள் மட்டுமே நடிக்க வாய்ப்பு கேட்டு படுக்கை வரை செல்வதாகவும், மலையாள திரையுலகை பொருத்தவரையில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் யாரிடமும் இல்லை என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகைகளை படுக்கைக்கு அழைத்ததாக எந்த புகாரும் நடிகர் சங்கத்திற்கு இதுவரை வரவில்லை என்று கூறிய இன்னோசெண்ட், மோசமான பெண்கள் மட்டுமே வாய்ப்புக்காக படுக்கைக்கு போவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
நடிகர் இன்னோசெட் கூறிய இந்த கருத்து மலையாள திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. நடிகைகள் குறித்து தரக்குறைவாக பேசிய அவருக்கு பிரபல நடிகைகள் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

More News

ரிலீசுக்கு தயாராகும் 'ஆதே கண்கள்' நாயகியின் அடுத்த படம்

'நெடுஞ்சாலை', 'அதே கண்கள்' உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகை ஷிவ்தா நாயர் நடித்து வரும் அடுத்த படம் 'கட்டம்'.

பிரபல பாடலாசிரியர் இயக்கும் 2வது படம்

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகமான ' வெயில்', தனுஷின் 'ஆடுகளம்', ஜிவி பிரகாஷ் நடித்த 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' போன்ற படங்களுக்கு பாடல்கள் எழுதிய பிரபல பாடலாசிரியர் ஏகாதேசி அவர்கள் ஏற்கனவே 'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை' என்ற படத்தை இயக்கியிருந்தார்

ரஜினியை அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்: சுப்பிரமணியம் சுவாமி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் பரிசோதனை செய்ய அமெரிக்காவுக்கு சென்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவர் கேசினோ விளையாடுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது....

கமலுக்கு அடுத்த இடத்தில் விஜய்சேதுபதியை பார்க்கிறேன். மாதவன்

மாதவன், விஜய்சேதுபதி முதன்முதலாக இணைந்து நடித்துள்ள 'விக்ரம் வேதா' படம் வெளியாவதற்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென தியேட்டர் வேலைநிறுத்தம் காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது...

அன்பானவர் அசராதவர் பிரமாதமானவர்: அஜித், விஜய், சூர்யா குறித்து காஜல்

அஜித், விஜய் என இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களில் ஒரே நேரத்தில் நாயகியாக நடித்து கொண்டிருக்கும் பெருமையை பெற்றவர் காஜல் அகர்வால். மேலும் கோலிவுட்டின் இன்னொரு முக்கிய நடிகரான சூர்யாவுடனும் நடித்தவர்...