கேரளாவில் கொரோனாவிற்கு முதல் பலி: துபாயில் இருந்து திரும்பியவர்

இந்தியாவில் அதிகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் மாநிலங்களில் ஒன்றாக கேரளா இருந்த போதிலும் நேற்றுவரை அம்மாநிலத்தில் கொரோனாவால் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை. இந்த நிலையில் சற்று முன்னர் 69 வயது நபர் ஒருவர் கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது

கடந்த 16 ஆம் தேதி துபாயில் இருந்து திரும்பிய இந்த நபருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இவருக்கு இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் ஏற்கனவே இருந்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு உடல்நிலை மோசமானதை அடுத்து அவர் சமீபத்தில் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்தார். இதனால் கேரளாவில் கொரோனாவால் பலியான முதல் நபராகவும், இந்தியாவில் கொரோனாவால் பலியான 20வது நபராகவும் இவர் உள்ளார்.

ஏற்கனவே டெல்லி, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், தமிழகம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு பேர்களும், குஜராத் மற்றும் கர்நாடக மாநிலத்தில் தலா மூவரும் மகாராஷ்டிர மாநிலத்தில் ஐவரும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

ஊரடங்கால் ஏற்பட்ட வறுமை: திடீரென தற்கொலை செய்த சென்னை நபர்

ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள மக்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் பணக்காரர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா: 40ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. வேலூர் கும்பகோணம் ஆகிய பகுதிகளில் உள்ள நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் இந்தியா முழுவதும் வெளிமாநிலத் தொழிலாளிகள் கடும் அவதி!!! 200 கி.மீ வரை நடந்தே செல்லும் அவலம்!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு கடந்த செவ்வாய்கிழமையில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது

கமல் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது ஏன்? மாநகராட்சி விளக்கம்

உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வீட்டில் சில நிமிடங்களுக்கு முன் மாநகராட்சி ஊழியர்கள் திடீரென கொரோனா ஸ்டிக்கரை ஒட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

தனிமைப்படுத்தப்பட்ட இளைஞருக்கு மனநலம் பாதிப்பு: மூதாட்டியை கொன்றதால் பரபரப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்தே வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களை மாநகராட்சி நகராட்சி ஊழியர்கள் தனிமைப்படுத்தி