ஓடிடியில் 'கே.ஜி.எப் 2' படத்தை பார்க்க இவ்வளவு கட்டணமா? அதிர்ச்சியில் சந்தாதாரர்கள்!

யாஷ் நடித்த ‘கே.ஜி.எப் 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது என்பதும் இந்த படம் 1100 கோடியை தாண்டி தற்போது திரையரங்குகளில் வசூல் செய்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் ‘கே.ஜி.எப் 2’ திரைப்படம் அமேசன் பிரைம் விடியோவில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்தப் படத்தை ஓடிடியில் பார்க்க தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு சந்தாதாரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தாதாரர்களாக இருந்தாலோ அல்லது சந்தாதாரராக இல்லாமல் இருந்தாலோ ரூ.199 கட்டணம் செலுத்தி ‘கே.ஜி.எப் 2’ திரைப்படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் அமேசான் பிரைமில் ‘கே.ஜி.எப் 2’ திரைப்படம் இடம் பெறவுள்ளது.

‘கே.ஜி.எப் 2’ படத்திற்காக ரூ..199 கட்டணம் கட்டினால் மட்டுமே பார்க்க முடியும் என்று அறிவிப்பு சந்தாதாரர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

More News

பிகினி உடையில் பிறந்த நாள் கொண்டாட்டம்: கேலி செய்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமீர்கான் மகள்!

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் மகள் ஐராகான் சமீபத்தில் பிகினி உடையில் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள்

மூன்றே நாளில் இத்தனை கோடியா? வசூலிலும் 'டான்' ஆன சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் 3 நாட்களில் வசூல் செய்த தொகை திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சினிமாவில் இருந்து விலக போகிறேன்: அதிரடியாக பேட்டியளித்த தமிழ் ஹீரோ!

நல்ல கேரக்டர்கள் கிடைக்காவிட்டால் சினிமாவில் இருந்து விலகப் போகிறேன் என தமிழ் ஹீரோ ஒருவர் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனைவியின் ஒரு வருட நினைவஞ்சலி: அருண்ராஜா காமராஜின் உருக்கமான கவிதை!

பிரபல இயக்குனர் அருண் ராஜா காமராஜ் மனைவி கடந்த ஆண்டு மே 17-ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியான நிலையில் அவருடைய ஒரு வருட நினைவஞ்சலி தற்போது அனுசரிக்கப்பட்டு வருகிறது.

விஜய் பெயரை கேட்டதும் அதிர்ந்த அரங்கம்: கமல் ரியாக்சன் பாருங்க!

நேற்று நடைபெற்ற கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது விஜய் குறித்து பேசியதும் அரங்கமே அதிர்ந்த நிலையில்