close
Choose your channels

'கேஜிஎப் 3' படத்தின் வில்லன் இந்த பிரபல நடிகரா?

Tuesday, May 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கேஜிஎப் 3’ படத்தின் வில்லனாக பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான ’கேஜிஎப் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

ஏற்கனவே இந்த படத்தில் ஒரு சில ஹாலிவுட் பிரமுகர்கள் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லனாக ரானா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் வில்லனாக நடித்த ரானா இந்த படத்தில் இணைந்தால் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

’கேஜிஎப் 2’ திரைப்படத்தில் மிகப்பெரிய வெற்றிக்கு சஞ்சய்தத் ஒரு காரணம் என்பது போல் ’கேஜிஎப் 3’ படத்தின் வெற்றிக்கு ரானா ஒரு மிகப்பெரிய காரணமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.