சூர்யாவின் 'கங்குவா' படத்தில் இணைந்த 'கேஜிஎப்' நடிகர்.. வேற லெவல் வில்லனா?

  • IndiaGlitz, [Thursday,June 22 2023]

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது சென்னையில் இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே பல பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது ’கேஜிஎப்’ திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் அவினாஷ் என்பவர் இணைந்துள்ளதாக தெரிகிறது.

இவர் இந்த படத்தில் இடம்பெறும் சரித்திர கால பகுதியில் வில்லனாக அவினாஷ் நடிக்க இருப்பதாகவும் ’கேஜிஎப்’ படத்தை விட மிரட்டலாக இந்த படத்தில் அவருடைய கேரக்டர் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை நடிகர் அவினாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வரும் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

More News

யூடியூப் கமெண்ட்தான் என்னுடைய வீடியோ - மதன் கௌரி

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023  நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது  .

சில நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு சரியாக ஒத்துழைப்பு தருவதில்லை - திரைப்பட தயாரிப்பாளர் தனஞ்செயன்

சமீபத்தில் முக்கிய நடிகர்கள் சிலருக்கு Red Card தரப்படப்போவதாக அறிவிக்கப்பட்டது இதனை அடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தனஞ்செயன்

42 வயதில் தலைகீழாக வொர்க்-அவுட்: நடிகை லைலாவின் வேற லெவல் வீடியோ..!

நடிகை லைலா ஜிம்மில் தலைகீழாக வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

என்ன ஒரு அழகு.. நடிகை தமன்னாவின் யோகா புகைப்படங்கள் வைரல்..!

 நேற்று சர்வதேச யோகா தினத்தில் நடிகை தமன்னா யோகா செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ள நிலையில் என்ன அழகாக யோகா செய்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு

ரத்தக்களறியுடன் கையில் கோடாரி.. ஓநாயின் பின்னணி.. அசத்தலான 'லியோ' ஃபர்ஸ்ட்லுக்..!

தளபதி விஜய் இன்று 49 வது பிறந்த நாளை கொண்டாடிவரும் நிலையில் அவர் நடித்துவரும் 'லியோ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாலை 12 மணிக்கு வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.