close
Choose your channels

'கேஜிஎப்' படத்தில் நடித்த பிரபல நடிகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

Thursday, December 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘கேஜிஎப்’  மற்றும்ன் ‘கேஜிஎப் 2’ படங்களில் நடித்த நடிகர் ஒருவர் காலமானதை அடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

யாஷ் நடித்த ‘கேஜிஎப்’ மற்றும் ‘கேஜிஎப் 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக ‘கேஜிஎப் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் ஆனது என்பதும் தெரிந்ததே. 

இந்தநிலையில் ‘கேஜிஎப்’ படத்தில்  நடித்த கிருஷ்ணா ஜி ராவ் என்பவர் வயது முதுமை காரணமாக காலமானார். கடந்த சில நாட்களாக நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் இதனை அடுத்து அவரது உயிர் பிரிந்ததாக உன் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கன்னட திரையுலகில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக அவர் பல பிரபல நடிகர்களுடன் நடித்து இருந்தாலும் ‘கேஜிஎப்’   படத்தில்தான் அவர் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக படத்தில் அவர் பேசிய வசனமான, ‘உங்களுக்கு ஒரு யோசனை சொல்றேன், நீங்க மட்டும் அவன் குறுக்க போய் விடாதீர்கள் சார்’ என்ற வசனம் மிகப் பெரிய அளவில் பிரபலமானது.

விரைவில் உருவாகவுள்ள ‘கேஜிஎப்’  மூன்றாம் பாகத்திலும் அவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் காலமானது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.