'கேஜிஎஃப்' தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் 'விக்ரம்' - 'சூரரைப்போற்று கனெக்சன்!

’கேஜிஎஃப்’ மற்றும் ’கேஜிஎஃப்’ 2’ ஆகிய பிரம்மாண்டமான படங்களை தயாரித்த நிறுவனம் அடுத்து தயாரிக்க உள்ள திரைப்படத்தில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ மற்றும் சூர்யாவின் ‘சூரரைப்போற்று கனெக்ஷன் இருப்பது தெரியவந்துள்ளது.

’கேஜிஎஃப்’ மற்றும் ’கேஜிஎஃப் 2’ உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பகத் பாசில் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்க உள்ளனர். சமீபத்தில் வெளியான ’விக்ரம்’ படத்தில் பகத் பாசில் சூப்பராக நடித்து இருந்தார் என்பதும் அபர்ணா பாலமுரளி ’சூரரைப்போற்று’ படத்திற்காக தேசிய விருது பெற்றவர் என்பதும் தெரிந்ததே.

’தூமம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த புதிய திரைப்படத்தை பிரபல கன்னட இயக்குனர் பவன் குமார் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ’லூசியா’ உள்பட ஒருசில சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 9ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் தமிழ் உள்பட 4 மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

More News

விஷால் வீடு தாக்குதல், சிவில் இஞ்ஜினியர் உள்பட 4 பேர் கைது: தாக்குதலுக்கு கூறிய அதிர்ச்சி காரணம்!

 சமீபத்தில் நடிகர் விஷாலின் வீடு தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விஷால் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது

'அந்த ஆறு பேருமே ஒருத்தன் தான்.. கார்த்தியின் 'சர்தார்' டீசர்

 கார்த்தி நடிப்பில், பிஎஸ் மித்ரன் இயக்கத்தி,ல் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'சர்தார்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன் பணிகள்

முதல்முறையாக பொறாமைப்படுகிறேன்: 'பொன்னியின் செல்வன்' குறித்து மீனாவின் பதிவு!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில்

ஏரியுடன் கூடிய தீவை விலைக்கு வாங்கிய பிரபல பாடகர்.. வீடியோ வைரல்!

பிரபல பாடகர் ஒருவர் ஏரியுடன் கூடிய தீவை சொந்தமாக விலைக்கு வாங்கி உள்ளதை அடுத்து இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சமந்தாவின் 'சாகுந்தலம்' ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

சமந்தா நடித்த 'சாகுந்தலம்' என்ற திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக