'கேஜிஎப்' தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தமிழ் படத்தில் பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Sunday,November 27 2022]

’கேஜிஎப்’ படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் நேரடி தமிழ் திரைப்படத்தில் பிரபல நடிகை நடிக்க இருப்பதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது

‘கேஜிஎப்’ ’கேஜிஎப் 2’ மற்றும் ’காந்தாரா’ உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம். இந்நிறுவனம் ஏற்கனவே பிரபாஸ் நடித்த ’சலார்’ உள்பட 5 திரைப்படங்களை தயாரித்து வருகிறது என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹோம்பாலே நிறுவனத்தின் முதல் நேரடி தமிழ் திரைப்படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும், இந்த படம் நாயகிக்கு முக்கியத்துவம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் எம்எஸ் பாஸ்கர் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷ் ‘மாமன்னன்’, ‘போலா சங்கர்,’ ‘தசரா’ மற்றும் ‘சைரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

அன்புத்தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்: வைரல் டுவிட்!

அன்பு தம்பிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் அவரது டுவிட்  தற்போது வைரலாகி வருகிறது. 

நடிகர் அருண்விஜய் மீண்டும் காயம்.. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!

 அருண் விஜய்க்கு கடந்த மாதம் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று தற்போது தான் குணமாகிய நிலையில்  அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி . 

'ஓ மை காட், நாம பணக்காரன்'.. வடிவேலு குரலில் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' பாடல்

நீண்ட இடைவேளைக்கு பின்னர் வடிவேலு ஹீரோவாக நடித்த 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவடைந்து வரும் டிசம்பர் 9-ம் தேதி

'துணிவு' படத்தில் பாடல் பாடிய பிரபல நடிகை.. அதிகாரபூர்வ அறிவிப்பு

 அஜித் நடித்த 'துணிவு' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கிட்டத்தட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும்

'தளபதி 67' இந்த படத்தின் ரீமேக்கா.. உரிமையை லோகேஷ் வாங்கியதாக தகவல்!

 தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 67' திரைப்படம் ஹாலிவுட் படம் ஒன்றின் ரீமேக் என்றும் அந்த படத்தின் உரிமையை லோகேஷ் கனகராஜ் வாங்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை