close
Choose your channels

'கேஜிஎப்' தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தமிழ் படத்தில் பிரபல நடிகை!

Sunday, November 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’கேஜிஎப்’ படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் நேரடி தமிழ் திரைப்படத்தில் பிரபல நடிகை நடிக்க இருப்பதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது

‘கேஜிஎப்’ ’கேஜிஎப் 2’ மற்றும் ’காந்தாரா’ உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம். இந்நிறுவனம் ஏற்கனவே பிரபாஸ் நடித்த ’சலார்’ உள்பட 5 திரைப்படங்களை தயாரித்து வருகிறது என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹோம்பாலே நிறுவனத்தின் முதல் நேரடி தமிழ் திரைப்படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும், இந்த படம் நாயகிக்கு முக்கியத்துவம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் எம்எஸ் பாஸ்கர் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷ் ‘மாமன்னன்’, ‘போலா சங்கர்,’ ‘தசரா’ மற்றும் ‘சைரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.