தமன்னாவுக்கு படுதோல்வி: தப்பிப்பாரா நயன்தாரா

  • IndiaGlitz, [Wednesday,June 19 2019]

இயக்குனர் சக்ரி டோலட்டி இந்தி மற்றும் தமிழில் இயக்கிய 'காமோஷி' மற்றும் 'கொலையுதிர்க்காலம்' திரைப்படங்கள் ஜூன் 14ஆம் தேதி திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத காரணத்தால் தமிழில் இந்த படம் வெளிவரவில்லை.

இந்த நிலையில் ஜூன் 14ஆம் தேதி திட்டமிட்டபடி வெளியான 'காமோஷி' திரைப்படம் பாலிவுட்டில் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த படம் வெற்றி பெற்றால் பாலிவுட்டில் வலம் வரலாம் என்ற தமன்னாவின் கனவு பொய்த்தது. அதேபோல் பாலிவுட்டில் பிரபுதேவாவுக்கு என ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. இருப்பினும் 'காமோஷி' திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை.

இந்த நிலையில் இதே படமான 'கொலையுதிர்க்காலம்' திரைப்படம் தமிழில் விரைவில் வெளிவரவுள்ளது. இந்தியில் தோல்வி அடைந்திருந்தாலும் நயன்தாராவுக்கு என தமிழ் திரையுலகில் ஒரு மாஸ் இருப்பதால் தமிழில் இந்த படம் வெற்றியடைவது மட்டுமின்றி மாஸ் ஓப்பனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'மிஸ்டர் லோக்கல்' தோல்வியை 'கொலையுதிர்க்காலம்' வெற்றியின் மூலம் நயன்தாரா சரிகட்டுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

பிக்பாஸ் 3 வீட்டில் கமலுடன் ரஜினி: புதிய தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு பாகங்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், வரும் 23ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவுள்ளார்

தமிழக ஆளுனருடன் விஷால் சந்திப்பு: நடிகர் சங்க தேர்தல் விவகாரமா?

நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் இடமான சென்னை ஜானகி எம்ஜிஆர் கல்லூரி வளாகத்திற்கு பாதுகாப்பு கேட்டு விஷால் தாக்கல் செய்த மனு நேற்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாக்யராஜ்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி ஞாயிறு அன்று நடைபெறவிருந்த நிலையில் சற்றுமுன் மாவட்ட பதிவாளர் இந்த தேர்தலை நிறுத்த அதிரடியாக உத்தரவிட்டார். 

40 வருடம் பணிபுரிந்த தபேலா கலைஞருக்கு இசைஞானி இறுதி மரியாதை!

இசைஞானி இளையராஜாவிடம் கடந்த 40 ஆண்டுகளாக தபேலா கலைஞராக பணிபுரிந்த கண்ணையா என்பவர் இன்று காலமானார்.

'தளபதி 63' அப்டேட்டுக்கு திமுக எம்.எல்.ஏ வாழ்த்து

விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு இடைவெளியின்றி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும்