ஆர்த்தி ரவிக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ள குஷ்பு, ராதிகா.. என்ன சொல்லி இருக்கிறார்கள்?


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை வெளியிட்ட நிலையில் இந்த பதிவுக்கு ஆதரவாக நடிகைகள் குஷ்பு மற்றும் ராதிகா தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்றான ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தம்பதியினர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்கின்றனர். மேலும் இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், நேற்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் பாடகி கெனிஷா உடன் ஜெயம் ரவி வந்தது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதன்பின் ஆர்த்தி ஒரு நீண்ட பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்த பதிவு ட்ரெண்டாகி வரும் நிலையில், குஷ்பு மற்றும் நடிகை ராதிகா ஆகியோர் ஆர்த்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில் “ஒரு தாயின் உண்மை வரும் நாட்களில் ஒரு சான்றாக நிற்கும்” என்று பதிவு செய்துள்ளார்.
அதேபோல், ராதிகா சரத்குமார் ஆர்த்தியின் அறிக்கையை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, “இந்த நேரத்தில் தான் தைரியமாக இருக்க வேண்டும்” என்பதை குறிக்கும் வகையில் எமோஜிகளை பதிவு செய்துள்ளார்.
மேலும் பலரும் ஆர்த்திக்கு ஆதரவாக தஙளது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The truth of a mother will stand as a testimony for days to come.#AartiRavi #LifeLessons #Mother #emotionalmoment pic.twitter.com/9bEQfuj1x2
— KhushbuSundar (@khushsundar) May 10, 2025
— Radikaa Sarathkumar (@realradikaa) May 9, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments